மதுரை: அதிமுகவினர் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து, சகிப்புத் தன்மையுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும் என முதல் வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவை வெல்வதற்கு தமிழ கத்தில் இன்னொரு இயக்கம் இல்லை என்றார். அதிமுகவினர் பேச்சைக் குறைத்துச் செயலில் இறங்க வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், எம்ஜிஆர் செய்த தியா கங்கள்தான் அவரை பொதுவாழ் வில் உயரச் செய்தன என்று கூறினார்.
அறிஞர் அண்ணாவின் பேச்சு, எம்ஜிஆரின் வசீகரம், ஜெயலலிதா வின் உழைப்பு ஆகியவற்றை அதிமுகவின் மூவர்ணக் கொடி யாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எம்ஜிஆரின் புகழ் இன்னும் நூறு ஆண்டுகள் நிலைக்கும் என்றார். "அண்ணா தொடங்கிய திமுகவை வெகுஜன இயக்கமாக மாற்றிக் காட்டியவர் எம்ஜிஆர். அவரின் அன்பான அணுகுமுறை யால் திமுக தமிழகத்தில் ஆட் சியைப் பிடித்தது.

