குழந்தைத் தொழிலாளர்கள் 127 பேர் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

குழந்தைத் தொழிலாளர்கள் 127 பேர் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

2 mins read

குமரி: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர். இந்நிலையில், 127 குழந்தை தொழிலாளர்களை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். இது தொடர்பாக நால்வர் கைதாகினர். நேற்று முன்தினம் கன்னியா குமரி, நாகர்கோவில் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங் களில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி தலைமையிலான குழு அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

அப்போது, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் வேலை பார்ப்பது தெரியவந்தது. குழந்தை களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் காவல்துறை உதவி யுடன் அவர்களை மீட்டது. முதல் நாள் 52 சிறுவர், சிறுமி யர் மீட்கப்பட்டனர். இதையடுத்து அதே நிறுவனத்தில் மீண்டும் சோதனை நடத்தியபோது மேலும் 75 சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்ட னர். அவர்கள் அனைவரும் தற் போது பறக்கின்கால் பகுதி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

இதையடுத்து அந்நிறுவனத்தில் க ண் கா ணி ப் பா ள ர் க ளா க ப் பணியில் உள்ள நான்கு பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளை அவர் களது பெற்றோரிடம் ஒப்படைக்க வும், குழந்தைகளை அழைத்து வந்த இடைத்தரகர்களைக் கைது செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்தச் சோதனை நடவடிக்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின் றன. குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.