சென்னை: எந்த விஷயத்திலும் அதிமுக அரசு முறையான நட வடிக்கைகளை மேற்கொள்வது இல்லை என திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், மரம் நடுதல், குளம் தூர்வாருதல் போன்ற பணிகளை முன்னிறுத்தி திமுக அரசியல் செய்யவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடப்பதாகவே பொதுமக்கள் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், மக்களுக்கான கட மையை திமுக தொடர்ந்து செய்து வருவதாகக் கூறினார். பதவி என்பதைவிட கட்சிப் பொறுப்புதான் உயர்ந்தது என்றும், அதிமுக ஆட்சியை முடக்க சட்ட ரீதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"நடப்பு அதிமுக ஆட்சியில், பால், அரிசி, குதிரைப் பேரம், குட்கா விவகாரம் என எதுவாக இருந்தாலும், 'தகவல் வந்தால் நடவடிக்கை எடுப்போம்' என்கின்ற னரே தவிர, முறையான நடவடிக் கைகள் எதையும் எடுப்பதில்லை. "ஏனென்றால், இந்த ஆட்சியாளர்கள், அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. குட்கா விற்பனை, கொலைக் குற்றத்துக்குச் சமமானது," என்றார் மு.க.ஸ்டாலின்.

