முதல்வர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்: 6 பேர் மீது வழக்குப் பதிவு

முதல்வர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்: 6 பேர் மீது வழக்குப் பதிவு

1 mins read

கோவை: முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆறு பேர் மீறு வழக்குப் பதிவாகி உள்ளது. பச்சாபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சண்முகத்துக்கும் அப்பகுதி அதிமுக மகளிரணி ஒன்றிய செயலரும் முதல்வரின் ஆதரவாளருமான ராதாமணிக்கும் இடையே மணல் எடுப்பதில் மோதல் உண்டானது. இதில் ராதாமணி காயமடைந்தார். இரு தரப்பினரும் போலிசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இரு தரப்பிலும் தலா மூவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.