சென்னை: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல் பாடு அவர் மத்திய அரசின் முக வரைப் போல் செயல்படுவதை உறுதிப்படுத்தி உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், டெல்லி, மேற்கு வங்கத் திலும் ஆளுநர்கள் அம்மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படு வதாகச் சாடியுள்ளார். ஜனநாயக நாட்டில் இத்தகைய செயல்பாடுகளை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநில ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்தும் போக்கினை மத் திய பாரதிய ஜனதா அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புதுவையில் பாஜகவினர் மூவர் நியமன சட்டப்பேரவை உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு புதுவையில் ஆளும் காங்கிரசும், இதர கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில அரசை மதிப்பதில்லை என ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

