செம்மொழி ஆய்வு மையத்தைச் சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் புகார்

செம்மொழி ஆய்வு மையத்தைச் சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் புகார்

2 mins read
003703cf-30f5-411a-9921-42b441e25b25
-

சென்னை: சென்னையில் இயங்கி வரும் செம்மொழி ஆய்வு மையத்தை திருவாரூர் பல்கலைக் கழகத்திற்கு மாற்றுகின்ற முயற் சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு செம் மொழி ஆய்வு மையத்தை சீர் குலைக்க முயற்சிப்பதாக அக் கட்சியின் மாநிலச் செயலர் ராம கிருஷ்ணன் குற்றம்சாட்டி உள் ளார்.

சென்னையில் உள்ள செம் மொழி ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை எனப் புகார் எழுப்பியுள்ள அவர், போதுமான நிதி இல்லாத போதி லும் அம்மையம் பல்வேறு பணி களை ஆற்றி வருவதாகக் குறிப் பிட்டுள்ளார். இந்நிலையில், மத்திய நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனை யின் பேரில் செம்மொழி ஆய்வு மையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பதை ஏற்க இயலாது என ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் சுயேச்சையாக இயங்கி வரும் மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக இணைக்க திட்டமிட் டுள்ளதாக வெளிவந்துள்ள தக வல் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

"இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு, அடுத்தக்கட்டமாக தமிழ் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய நட வடிக்கைகளை மேற்கொண்டுள் ளது. சென்னையில் உள்ள ஆய்வு மையத்தை திருவாரூரில் உள்ள பல்கலைக்கழகத்தோடு இணைத்தால் ஆய்வு மையத்தின் சுயேச்சை யான பணி பாதிப்புக்குள்ளாகும்," என ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார். செம்மொழி ஆய்வு மையம் சென்னையிலே சிறப்பாகச் செயல் பட மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட் டுள்ள அவர், மாநில அரசின் வற்புறுத்தலுக்குப் பிறகே மைசூரில் இயங்கி வந்த ஆய்வு மையம் சென்னைக்கு மாற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராம கிருஷ்ணன்