மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைப் பகுதிகளைப் பிரித்து 'கூர்க்காலாந்து' தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்தக் கோரிக்கையை ஒட்டி அங்கு அவ்வப்போது வன்முறைப் போராட்டங்களும் அரங்கேறி வரு கின்றன. அந்த வகையில், டார்ஜிலிங்கில் நிறுத்தப்பட்டிருந்த உலக மரபு டைமை பொம்மை ரயில், திரிணா மூல் காங்கிரஸ் கட்சி அலுவலகம், ஒரு போலிஸ் வாகனம் ஆகிய வற்றுக்கு போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் தீ வைத்தனர். அப்போது வன்முறையாளர் களைக் கலைக்க போலிசார் சுட்ட தில் மூன்று பேர் உயிரிழந்ததாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள 'கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்)' அமைப்பு தெரிவித்தது. ஆனால், ஒருவர் மட்டுமே மாண்டதாகவும் அதுவும் விபத்து காரணமாகவே நிகழ்ந்தது என்றும் போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தஷி பூட்டியா, சுராஜ் சுந்தாஸ், சமீர் குருங் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டதாக 'ஜிஜேஎம்' கூறுகிறது.
"துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சுந்தாசுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றபோது சமீர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் 'சிஆர்பிஎஃப்' படையினரால் சுடப் பட்டிருக்கலாம்," என்றார் 'ஜிஜேஎம்' அமைப்பின் தலைவர் பிரகாஷ் குருங். டார்ஜிலிங் இமயமலை ரயில்வே பிரிவின்கீழ் வரும் ஒரு ரயில் நிலையத்திற்குப் போராட்டக்காரர் கள் குறிவைத்தனர். அங்கிருந்த உலக மரபுடைமை பொம்மை ரயி லுக்கும் பயணிகள் காத்திருப்பு அறைக்கும் அவர்கள் தீ வைத்த தாகக் கூறப்பட்டது. அந்தச் சுற்று லாத் தலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது.

