இளையர்கள் அரசியலில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்: சகாயம் வலியுறுத்து

இளையர்கள் அரசியலில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்: சகாயம் வலியுறுத்து

2 mins read
8df4ef0a-cd9c-4ed7-a128-66c04a2a4308
-

தஞ்சை: இளையர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்வது வருத்தம் அளிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கவலை தெரிவித்துள்ளார். இளையர்களின் சக்தி இவ் வாறு வீணாவதைத் தடுத்து அவர் களை நல்வழியில் செயலாற்றச் செய்ய வேண்டும் எனத் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் வலியுறுத்தினார். இளையர்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தமிழகத் தில் இயற்கை வளங்கள் கொள்ளைபோவதை அரசு உடனடி யாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். "இளைஞர்கள் அரசியலுக்கு வந்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவது அர சால் தடுக்கப்பட வேண்டும். கிரா னைட் முறைகேடு பற்றி எனது மனசாட்சிப்படி அரசுக்கும் நீதிமன் றத்துக்கும் அறிக்கை அனுப்பி உள்ளேன். அதன்படி அவர்கள் தான் நடவடிக்கை எடுக்கவேண் டும்," என்றார் சகாயம். எந்த விஷயத்திலும் சமுதா யத்தை நாம் குறைகூறக் கூடாது என்று குறிப்பிட்ட அவர்,

சமுதா யத்தில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் சமுதாயமும் நேர்மையானதாக இருக்கும், நேர்வழியில் செல்லும் என்றார். "இந்தச் சமூகத்தை நேசிக்கக் கூடிய தலைவர்களைக் கொண்டு வர இளையர்களால் மட்டும்தான் முடியும். என்னைப் பொறுத்தவரை இளையர்கள் பெருமளவு அரசி யலுக்கு வரவேண்டும். "நேர்மையான சமூகத்தை உருவாக்குவதன் மூலமாக அரசி யலில் நேர்மையான தலைமையை உருவாக்க முடியும்," என்று சகாயம் தெரிவித்தார். தங்கள் இயக்கம் சார்பில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இளையர்களை ஒருங்கிணைத்து இருநூறுக்கும் மேற்பட்ட பகுதிக ளில் விதை கிராமங்களை உரு வாக்கி, விதைப் பந்துகளைத் தூவி இருப்பதாகத் தெரிவித்தார். காடுகளின் பரப்பளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே தங்கள் இயக்கத்தின் நோக்கம் என்றார் சகாயம். "இளையர்களை நேர்வழியில் கொண்டு செல்லவே பாடுபடு கிறோம். இளையர்களால் மட்டுமே சமுதாயத்தில் நல்ல பல மாற்றங் களைக் கொண்டு வர இயலும். "அதற்கு இளையர்களிடம் தலைமைத்துவப் பண்புகள் அதிக ரிக்க வேண்டும்," என்றார் சகாயம்.