கதிராமங்கலம் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்: டிராஃபிக் ராமசாமி கவலை

கதிராமங்கலம் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்: டிராஃபிக் ராமசாமி கவலை

1 mins read

கும்பகோணம்: கதிராமங்கலம் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக சமூக ஆர் வலர் டிராஃபிக் ராமசாமி கூறி உள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு இதுவரை இழப்பீடு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கதிராமங்க லத்தை விட்டு போலிசாரும் வெளியேற வேண்டும் என்றார். "கதிராமங்கலம் மக்கள் தங்க ளுடைய ஆதார் உள்ளிட்ட அடை யாள அட்டைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்போவ தாகத் தெரிவித்தனர். நான் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

ஏனென்றால், ஆதார் அடையாள அட்டையை ஒப்படைத்தாலும் இந்த அரசு எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை," என்று ராமசாமி கூறினார். கதிராமங்கலத்தில் போராட்டத் தில் ஈடுபட்டதற்காக கைதான 10 பேரை திருச்சி சிறையில் அடைத் துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், கைதானவர்களைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும், இது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். "கைதானவர்களைப் பார்க்க அனுமதி அளிக்காத போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன். "கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்," என்றார் டிராஃபிக் ராமசாமி.