சேலம்: மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது அவினா சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் மதுக்கடை களை மூட வலியுறுத்தியும் உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை பெண்கள் குழுவாகச் சென்று சூறையாடிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் மதுக்கடையை திறக்கக் கோரி பெண்களே ஆர்ப் பாட்டம் நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிய டாஸ் மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடை மூடப்படும் என உறுதி அளித்த தால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பச்சாம்பாளை யத்தைச் சேர்ந்த சில பெண்களும் ஆண்களும் இணைந்து நேற்று முன்தினம் மதுக்கடையைத் திறக்க வலியுறுத்தி திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவினாசி பழங்கரை சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து நிலைகுத்தியது. மதுக் கடைக்கு ஆதரவாக பெண்களே போராட்டத்தில் குதித்ததால் ஆச்சரியம் அடைந்த போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத் தைக் கைவிடச் செய்தனர்.