பேருந்து மோதி மீனவர் பலி: தங்கச்சி மடத்தில் வெடித்தது கலவரம்

பேருந்து மோதி மீனவர் பலி: தங்கச்சி மடத்தில் வெடித்தது கலவரம்

1 mins read

ராமநாதபுரம்: அரசுப் பேருந்து மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் தங்கச்சி மடத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நேற்று முன்தினம் இப் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற மீனவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் மீனவர் ஜெகன் சம்பவ இடத்தி லேயே உடல்நசுங்கிப் பலியானார். இதுகுறித்து தகவல் பரவிய தும், ஜெகனின் உறவினர்கள், சக மீனவர்கள் என ஏராளமானோர் விபத்து நடந்த பகுதியில் கூடினர். ஆவேசமடைந்த அவர்களில் சிலர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து நிலை குத்த, காவல்துறையினர் போராட் டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறு போலிசார் அறிவுறுத்தியதால், மறி யலில் ஈடுபட்டவர்கள் மேலும் ஆவேசமடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலிசார் மீது திடீரென கற்களை வீசித் தாக்கினர். மேலும், அவ்வழியே சென்ற ஒரு பேருந்துக்கும் தீ வைத்தனர். இதனால் ராமநாதபுரத்தில் இருந்து ஆயுதப்படை போலிசார் அதிக எண்ணிக்கையில் தங்கச்சி மடத்துக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, கூட்டம் கலைக்கப் பட்டது. இதன் காரணமாக தங்கச்சி மடம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் போலிசில் சரணடைந்துள்ளார்.