சென்னை சில்க்ஸ் கட்டட தரைத்தளத்தில் புதைந்து கிடந்த 400 கிலோ தங்கம் மீட்பு

சென்னை சில்க்ஸ் கட்டட தரைத்தளத்தில் புதைந்து கிடந்த 400 கிலோ தங்கம் மீட்பு

2 mins read
ad809f75-bcd1-44ac-bc76-f6c4df25ecce
-

சென்னை: மே மாத இறுதியில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் உருக்குலைந்து போன சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத் தளத்தில் மண்ணுக்குள் புதைந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து சுமார் 400 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு தினங்கள் எரிந்ததால் அக்கட்டடம் உருக்குலைந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கட்டடத்தை முழுமையாக இடிக்க அரசு உத்தரவிட்டது. அந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் 2, ஆறாவது தளத்தில் 1 என மொத்தம் 3 ரகசிய பாது காப்புப் பெட்டகங்கள் இருந்ததாக வும், அவற்றுள் கோடிக்கணக்கான மதிப்புள்ள பல கிலோ தங்க, வைர நகைகளும், வெள்ளிப் பொருட்க ளும் இருப்பதாகவும் அப்போதே தகவல் வெளியானது.

எனினும் கட்டடத்தை இடித்துத் தள்ளிய போது மூன்று பெட்டகங்க ளும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டது. பெட்டகங்களின் அளவு பெரிதாக இருந்தபடியால் இடிபாடுகளில் இருந்து அதை மொத்தமாக மேலெ டுக்க முடியாது என நிபுணர்கள் தெரிவித்தனர். எனவே பெட்டகங்களைத் திறந்து அவற்றில் உள்ள நகைகளை மட்டும் மீட்பது என முடிவானது. அதன்படி நேற்று முன்தினம் தரைத்தளத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டது. அதில் 400 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

அந்நகைகளை மொத்தமாக வேறொரு இரும்புப் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல முடியா ததால், 25 சிறிய ரக இரும்புப் பெட்டியில் வைத்து பாதுகாப்பான இடத்துக்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து மற்ற இரு பாதுகாப்புப் பெட்டகங்களை திறப் பதற்கான நடவடிக்கைகளை துவங்கி உள்ளன. தரைத்தளத்தில் உள்ள மற்றொரு பாதுகாப்புப் பெட்டகத்தில் ரொக்கப் பணம் உள்ளது என்றும், ஆறாவது தள பெட்டகத்தில் வைரம், வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 42 நாட்கள் கழித்து தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலை யில், மற்ற இரு பெட்டகங்களில் உள்ள பொருட்களை மீட்க மேலும் மூன்று நாட்கள் ஆகும் என சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தெரிவிக்கின்றனர்.

தீயால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் படம்: ஊடகம்