அனைத்திலும் ஊழல்: கமல் புகார்; ஜெயக்குமார் கண்டனம் சென்னை: தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடர்பில் தின மும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் தேவையின்றித் தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தான் வழிநடத்தும் அந்த நிகழ்ச்சி பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மீது நடிகர் கமல் சேற்றை வாரி வீசுவதை ஏற்க இயலாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பல் வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத் தளங்களில் அந்நிகழ்ச்சியும், அதில் பங்கேற்பவர்களும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள னர். இதையடுத்து, அந்த நிகழ்ச் சிக்குத் தடை விதிக்க வேண் டும், கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த கமல், பல்வேறு விளக்கங்களை அளித்தார். தன் னிடம் கேட்கப்பட்ட கேள்விக ளுக்கு அவர் அதிரடி பதில்களை அளித்தார். சிலர் தன்னைச் சிறையில் வைத்துப் பார்க்க விரும்புவதாக வும், அத்தகையவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் தமக்கில்லை என்றும் அவர் தெரிவித்தார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் தமிழ்க் கலாசாரம் சீரழிந்து விடாது என்று குறிப்பிட்ட அவர், தன்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க வேண்டிய கடமை தமக்கு உள்ளதாகவும் கூறினார். "முன்பு 'தசாவதாரம்' திரைப் படத்தைப் பாராட்டியவர்கள்தான் இப்போது என்னை எதிர்க்கிறார் கள். கிரிக்கெட் என்ற விளை யாட்டு எந்தளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியும் அவசியம். என்னை எதிர்ப்பவர்களும்கூட எனது ரசிகர்களே," என்றார் கமல். இந்தியாவின நிர்வாக (சிஸ் டம்) அமைப்பு சரியாக இல்லை என்று தாம் ஏற்கெனவே கருத்து கூறியிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர், அதையே தற்போது நடிகர் ரஜினி உள்ளிட்டோர் வழி மொழிந்து வருவதாக கூறினார்.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் கமல் குற்றம் சாட்டினார். அவரது இப்புகார் ஆளும் அதி முகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமல் தெரிவித்த கருத்தின் மீதான தமது அதிருப்தியை வெளிப் படுத்தினார். "தான் நடத்தும் நிகழ்ச்சி பிரப லமடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மீது கமல் சேற்றை வாரி வீசுவதா? சிஸ்டம் சரி யில்லை என்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே சரி யில்லை என கமல் சொல்ல வருகிறாரா?" என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

