தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 85% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மாநில அரசின் அரசாணையை எதிர்த்து சி.தர்னீஷ் குமார் என்ற 'சிபிஎஸ்இ' பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர் தொடர்ந்த வழக் கில் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிச்சந்திர பாபு இந்தத் தீர்ப்பை வழங்கினார். உள்ஒதுக்கீட்டு அரசாணை செல்லாது என்றும் இந்திய மருத்துவக் கழகச் சட்டப்படி, மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை முறையில் மாற்றங்கள் செய்ய இந்திய மருத்துவக் கழகத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அந்த மாணவர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா முழுவதும் நடத்தப் பட்ட 'நீட்' நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே மருத்துவக் கல்விக் கான சேர்க்கை நடைபெறவேண் டும் என்றும் இதில் மாநில பாடத்திட்ட, சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் என்ற பாகுபாடு கூடாது என்றும் இந்திய மருத் துவக் கழகம் வரையறுத்துள்ளது. மாணவர் தர்னீஷ் குமாரின் மனுவை எதிர்த்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 'நீட்' தேர்வைத் தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டார்.
"'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள் ளன," என்று அவர் சொன்னார். அத்துடன், தமிழகத்திலிருந்து 88,431 மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதியதாகவும் அதில் 4,675 மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ மாணவர்கள் என்றும் அவர் சுட்டி னார். எல்லாருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்கா கவே உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

