கூர்க்காலாந்தில் தனி மாநிலம் கேட்டு போராட்டம் வலுக்கிறது

கூர்க்காலாந்தில் தனி மாநிலம் கேட்டு போராட்டம் வலுக்கிறது

2 mins read

கூர்க்காலாந்து: கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி நேற்று 29வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. அப்போது அரசு கட்டிடங்கள், வாகனங் களுக் குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் டார்ஜிலிங் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேற்குவங்க மாநிலத்தின் பிர பலமான சுற்றுலாத் தலம் டார்ஜி லிங் உட்படச் சில மலைப் பகுதிகளைப் பிரித்து, கூர்க்கா லாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக மலைப்பகுதிகளைச் சேர்ந்த 15 அரசியல் கட்சிகள் சேர்ந்து கூர்க்காலாந்து இயக்க ஒருங்கிணைப்புக் குழுவை (ஜிஎம்சிசி) உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பினர் கோரிக் கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் நேற்று 29வது நாளாக நடந்தது. இந்நிலையில், நேப்பாள கவிஞர் பானுபக்த ஆச்சார்யாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு மேற்கு வங்க சுற்றுலாத் துறை அமைச்சர் கவுதம் தேவ் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பனகட்டா பகுதியில் அமைச்சர் கார் மீது போராட்டக் காரர்கள் கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அத்துடன் கூர்க்காக் கள் வைத்திருக்கும் கத்திகளுடன் போராட்டக்காரர்கள் முழக்கமிட்ட படி ஓடிவந்தனர். பாதுகாப்புக் காவல்துறையினர் அமைச்சரை உடனடியாக மீட்டு, ராணுவத்தினர் தங்கியுள்ள இடத் துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் டார்ஜிலிங் பகுதியில் உள்ள அரசு கட்டிடங் கள், மலை ரயில் நிலையம், அரசு வாகனங்களுக்குப் போராட்டக் காரர்கள் தீ வைத்தனர்.