விழுப்புரம்: நடிகர் கமல்ஹாசனுக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் பறி போனதால் மூன்றாம் தர நடிகராகப் பேசுகிறார் என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், பெண்களைப் பற்றி பேச கமலுக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை எனக் காட் டத்துடன் குறிப்பிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கமல் பல்வேறு விளக் கங்களை அளித்தார். அப்போது, தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது ஆளும் அதிமுக வுக்கு கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சி.வி.சண்மு கம் காசு பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர் கமல் என்றும் சாடினார்.
"பணத்துக்காகவும் ஆதாயத் துக்காகவும் மட்டுமே 'பிக்பாஸ்' என்ற நிகழ்ச்சியை கமல் நடத்தி வருகிறார். அவரது முழு முயற்சியால் தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது," என்றார் அமைச்சர் சண்முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி கமல் பேசி வருவ தாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்காக வன்கொடுமைச் சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே சேரிப் பகுதி மக்களின் நற்குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் கமலும், மற்ற பங்கேற்பாளர்களும் சேரியில் சில நாட்கள் வாழ்ந்து பார்க்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

