நீலகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு உள்ளிட்ட அவரது பல சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். குன்னூரில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக உரு வாக்க வேண்டுமெனில் உடனடி யாக லோக் ஆயுக்தா சட்டத்தை அமல் படுத்த வேண்டியது அவசி யம் என்று அவர் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்படுவதாகச் சாடிய அவர், இதை எக்காரணத்தைக் கொண் டும் ஏற்க இயலாது என்றார்.
"கர்நாடகா சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்க அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாக எழுந்துள்ள புகாரை முறையாக விசாரணை செய்தால் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும். "லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த ஆட்சியாளர்கள் தயங்கக் கூடாது. ஏனெனில் அப்படியொரு சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சமும் ஊழ லும் குறையும்," என்று ராம கிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டுமெனில் இன் னொரு தேர்தலை நடத்துவதே சரியான நடவடிக்கையாக அமை யும் என்றார். தமிழகத்தில் தற்போது மோச மான ஆட்சி நடப்பதாகக் குறிப் பிட்ட அவர், அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல்களே இதற்குக் காரணம் என விமர்சித்தார். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவதில் அதிமுக அரசு பின்வாங்கி விட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இதற்கு முதல்வர் பழனிசாமியும் அதிமுக தலைமையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். "நாட்டை ஆளும் பாஜக தனக் கென ஒரு தத்துவத்தை உரு வாக்கிக் கொண்டு அதைச் செயல்படுத்த முயல்கிறது. இது இந்தியப் பாரம்பரியத்திற்கு அறவே எதிரானது. "மாட்டிறைச்சி விஷயத்தில் பலர் தாக்கப்பட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மாநிலங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்," என்று காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
ராமகிருஷ்ணன்

