எல்லை கடந்ததாகக் குற்றச்சாட்டு: தமிழக மீனவர்கள் நால்வர் கைது

எல்லை கடந்ததாகக் குற்றச்சாட்டு: தமிழக மீனவர்கள் நால்வர் கைது

1 mins read

புதுக்கோட்டை: கடல் எல்லையைக் கடந்து வந்து மீன் பிடித்ததாகக் கூறி மேலும் நான்கு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டி னத்தைச் சேர்ந்த இந்த நான்கு மீனவர்களும் நாட்டுப் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். நேற்று அதிகாலை இலங்கையின் கோவிலன் கடற்பகுதிக்கு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென சுற்றுக்காவல் படகில் அங்கு வந்த கடற்படை யினர் நான்கு மீனவர்களைக் கைது செய்தனர். இதையடுத்து நால்வரையும் விசாரிப்பதற்காக காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.