சதுரகிரி மலைப் பாதையில் நெரிசல்: பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி பலி;

சதுரகிரி மலைப் பாதையில் நெரிசல்: பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி பலி;

1 mins read
6201bdba-3f82-4da7-9119-eda0dd9d92c9
-

விருதுநகர்: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் மூச்சுத் திணறி பலியான சம்பவம் சதுரகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுர கிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டனர். கோவில் மலைப்பாதையில் ஒரே சமயத்தில் ஏராளமான பக்தர் கள் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் ஒவ்வொரு அடி யாக ஊர்ந்து செல்ல வேண்டி யிருந்தது. வழக்கமாக அமாவாசை தினத் தன்று இரவு 7 மணிக்கு சிறப்புப் பூசை நடைபெறும். நேற்று முன் தினம் ஆடி அமாவாசை விடுமுறை தினத்தில் அமைந்ததால் வழக் கத்தைவிட பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதற்காக சனிக்கிழமை இரவே பக்தர்கள் பலர் குவிந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏராளமானோர் மலையடிவாரத்தில் குவிந்தனர்.