சிக்கிம் எல்லையில் சீனா டாங்கி களையும் ராணுவ தளவாடங் களையும் குவித்து வருவதாக ஒரு காணொளி வெளியாகி போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சீன இராணுவம் இந்தியாவுக்கு எதிராக போரிடுவதற்கு சிக்கிமின் டோக்கலாந்தில் ராணுவ டாங்கி கள், ராணுவத் தளவாடங்களை நகர்த்தியது. இதுகுறித்த காணொளி தற்போது இணையத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய காணொளிக் காட்சியில் மலைப் பகுதியை நோக்கி 33 டாங்கிகள், ராணுவ வாகனங்கள், ராணுவ வீரர்கள் செல்வது தெரிகிறது. டோகா லா எல்லையில் ராணுவ வலிமையை அதிகரிக்கும் என்று சீனா அறிவித்த பின் இந்தச் செயல் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் உலவும் இந்தக் காணொளி குறித்து சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள் விகளை எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் இந்தக் காணொளி இன்டெல் க்ராப்பால் டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது. இது உலகளாவிய இராணுவ இயக்கங் களைக் கண்காணிக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். ஆனால் சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்கள், "இது பழைய காணொளி. தற்போதைய டோக்கலாம் எல்லையில் பதற்றம் எதுவுமில்லை," எனத் தெரி விக்கிறது. பாதுகாப்பு நிபுணர்களின் தகவலின்படி இந்தப் பழைய காணொளி சீனாவின் உளவியல் செயற்பாடுகளின் அடிப்படையின் ஒரு பகுதியாக இந்தியா மீது அழுத்தத்தை உருவாக்குகிறது எனக் கூறினார். சிக்கிம் மாநில எல்லையை ஒட்டி இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளன. அந்தப் பகுதியை டோகா லா என இந்தியாவும் டோகாலாம் எனப் பூட்டானும் டோங்லாங் எனச் சீனாவும் அழைக்கின்றன. இந்தப் பகுதியில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என 2012ஆம் ஆண்டு எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய் யப்பட்டது.

