புதிய அதிபரின் மகள் சுவாதி: தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணாகவே பணிபுரிவேன்

புதிய அதிபரின் மகள் சுவாதி: தொடர்ந்து விமானப் பணிப்பெண்ணாகவே பணிபுரிவேன்

1 mins read
953fb1ed-302b-42cf-82a8-fa8e1abc85b4
-

புதுடெல்லி: நான் தொடர்ந்து விமானப் பணிப் பெண்ணாகவே பணியாற்றுவேன் என்று நாட்டின் 14வது புதிய அதிபராகப் பொறுப் பேற்றுள்ள ராம்நாத் கோவிந்தின் ஒரே மகள் சுவாதி தெரிவித் துள்ளார். சுவாதி ஏர் இந்தியா நிறுவனத் தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை அதிபராகப் பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசி னார். "எனது தந்தை நாட்டின் 14வது அதிபராகப் பதவியேற்றதற்கு அவருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும்தான் காரணம். "எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் நல்லமுறையில் கல்வி கற்கவேண்டும் என்று வலி யுறுத்துவார். அதன் காரணமாகத் தான் எங்களது குடும்பத்தினர் இப் போது சொந்தக்காலில் நிற்கிறோம். அவர் உயர்ந்த பதவிக்கு வந்ததால் எனது வேலையை விட்டு விடமாட்டேன். நான் தொடர்ந்து விமானப் பணிப் பெண்ணாகவே பணியாற்று வேன்," என்று கூறியுள்ளார்.

மகள் சுவாதி யுடன் அதிபர் ராம் நாத் கோவிந்த்.