சென்னை: வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கடும் அதிர்ச்சியைத் தருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகப் போராளிகள் மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். "பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா சமூகப் போராளிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை," என்றார் திருமாவளவன்.
வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாட நீதிமன்றம் உத்தரவு: திருமாளவன் அதிர்ச்சி
1 mins read
-

