பதவி விலகிய 24 மணி நேரத்திற்குள் மீண்டும் பீகார் முதல்வராகப் பொறுப்பேற்ற நிதீஷ்குமார்

பதவி விலகிய 24 மணி நேரத்திற்குள் மீண்டும் பீகார் முதல்வராகப் பொறுப்பேற்ற நிதீஷ்குமார்

2 mins read
1e886b6b-411f-4f4b-b5a4-1612eba2006f
-

இந்தியாவின் பீகார் மாநில முதல்வர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் விலகிய நிதீஷ் குமார் நேற்று மீண்டும் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். துணை முதல் வராக பாஜகவின் சு‌ஷில் மோடி பதவியேற்றுக்கொண்டார். பீகாரில் 2015ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் 181 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதீஷ்குமார் முதல் வராகவும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவுக்குத் துணை முதல்வராக வும் பொறுப்பேற்றனர்.

இம்மாதம் 7ஆம் தேதி லாலு, அவரது மகளும் எம்.பி.யுமான மிசா பாரதி, தேஜஸ்வி ஆகியோர் ஊழல் புகாரில் சம்பந்தப்பட்டுள்ள தாகக் கூறி அவர்கள் மீது சிபிஜ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, தேஜஸ்வி துணை முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என பாஜகவும் கூட்டணிக் கட்சியான ஜக்கிய ஜனதா தளமும் வலியுறுத்தின. ஆனால், தன் மகன் பதவி விலக மாட்டார் என்று லாலு தொடர்ந்து கூறிவந்தார்.

இதையடுத்து, ஆளும் கூட்ட ணிக்குள் கருத்து வேறுபாடு அதி கரித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்த நிதீஷ்குமார், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்டார். திடீர் திருப்பமாக 53 எம்எல்ஏக் களை வைத்துள்ள பாஜக ஆதரவுடன் நிதீஷ் நேற்று காலையில் மீண்டும் முதல்வராகப் பொறுப் பேற்றுக்கொண்டார்.

ஆனால், 80 எம்எல்ஏக்களுடன் தனிப் பெரும்பான்மை கட்சியாக உள்ள தங்களை அழைக்காமல் 71 எம்எல்ஏக்களை மட்டும் வைத் துள்ள ஐக்கிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத் ததற்கு லாலு கட்சி எதிர்ப்புத் தெரிவித்து, தெருவில் இறங்கிப் போராடியது. ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாகவும் லாலு கூறியுள்ளார். நிதீஷ்குமார் துரோகமிழைத்து விட்டார் எனவும் 3-4 மாதங்களா கவே அவர் இதற்குத் திட்டமிட்டு வந்தார் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ள நிலையில், 'துணிச்ச லான முடிவு' என இந்தியப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.