தன்னம்பிக்கையால் உச்சத்தைத் தொடமுடியும் என்பதற்கு உதாரணம் அப்துல்கலாம்: முதல்வர்

தன்னம்பிக்கையால் உச்சத்தைத் தொடமுடியும் என்பதற்கு உதாரணம் அப்துல்கலாம்: முதல்வர்

1 mins read

சென்னை: முன்னாள் அதிபர் அப்துல்கலாமின் 2வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்படு கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில், அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப் பட்ட ராமேசுவரம் பேக்கரும்பில் நினைவிடம் கட்டப்பட்டு உள் ளது. அந்த நினைவிடத் திறப்பு விழாவில் பேசிய முதல்அமைச்சர் எடப்பாடிப் பழனிசாமி, அப்துல் கலாமின் மணிமண்டபத்தைத் திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டார். ராமேசுவரத்தில் அப்துல்கலா முக்கு மணிமண்ட பம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

ராமாயணத்தால் ராமேசுவரம் புகழ்பெற்றது போல அப்துல்கலாமால் ராமேசுவரம் மீண்டும் புகழ்பெற்றுள்ளது. உண்மை, உழைப்பு, தன்னம்பிக்கையால் உச்சத்தைத் தொடமுடியும் என்பதற்கு அப்துல்கலாம் உதாரணம். அப்துல் கலாம் பெயரில் ரூ.5 லட்சம் மதிப்பில் விருது அறிவித்துக் கலாமுக்குப் பெருமை சேர்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்குக் கச்சத்தீவை மீட்பதே தீர்வு . தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கக் கட்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று வலியுறுத்தி வந்தவர் ஜெய லலிதா. ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற் படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களையும், படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.