ஈரோடு: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் இருப்பதை மாநில அரசு ஒத்துக்கொள்ள வேண்டும் என பாமக இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கி பாதிப்பு இருப்பதை அரசு மறுப்பது மிகப் பெரிய தவறு என்றும் உண் மையைச் சொன்னால்தான் மக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் கூறினார். டெங்கி பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க மாநிலம் முழு வதும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் மாநி லத்தைச் சீரழித்துவிட்டதாகச் சாடிய அவர், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் கல்வி, மருத்துவத்தில் தமிழகம் முன் னேற்றம் காணும் என்றார்.
"முன்பு ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் இருக்கும். ஆனால் இன்று வெறும் 25 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. திமுகவும் அதிமுகவும் செய்த துரோகத்தால் தான் இன்று காவிரியில் தண்ணீர் இல்லை.
"டெங்கி காய்ச்சல் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி ஆகியவற்றில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர்தான்," என்று அன்புமணி சுட்டிக்காட்டினார். காவிரி நீர் பிரச்சினையில் தமிழக மக்களை அதிமுகவும் திமுகவும் வஞ்சித்துவிட்டதாகச் சாடிய அவர், இவ்விவகாரம் தொடர்பில் கடந்த 50 ஆண்டு களாக இரு கட்சிகளுமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
"காவிரி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடி யாக அமைக்க வேண்டும். மணற் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என்றார் அன்புமணி.

