தஞ்சை: கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலத்தில் காலவரை யற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஐந்து பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகிய பத்து பேரை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் சேவை இயக்கத்தைச் சேர்ந்த இருவரும் கதிராமங்கலத்தைச் சேர்ந்த மூவரும் இரு தினங்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடற்சோர்வால் பாதிக்கப்பட்ட ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கதிராமங்கலம்: உண்ணாவிரதம் இருந்த ஐவர் உடல்நிலை பாதிப்பு
1 mins read

