தமிழகத்தில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

1 mins read
493e1151-af6c-483b-8115-cdb9802b3d40
-

சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு குறித்து அரசுத் தரப்பில் உண்மையான தகவல்கள் வெளியிடப்படுவ தில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கி காய்ச்சல் தீவிரமடைந்துள்ள தாகத் தமிழக ஊடகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1800 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து டெங்கி பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயம் விநியோகிக் கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். நாடு முழுவதும் தற்போது பல்வேறு மாநிலங்களில் டெங்கி காய்ச்சல் பரவி வருகிறது. தேசிய அளவில் கேரளாவில் தான் இக்காய்ச்சலால் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள் ளனர். கடந்த 7 மாதங்களில் மட்டும் அம்மாநிலத்தில் ஏறத் தாழ 13 ஆயிரம் பேருக்கு டெங்கி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் டெங்கி காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.