ஐஎஸ்ஸில் இணைந்த மற்றொரு கேரள வாலிபர் கொலை

ஐஎஸ்ஸில் இணைந்த மற்றொரு கேரள வாலிபர் கொலை

1 mins read
29cd012d-af69-4558-8cd3-43600b594575
-

ஐஎஸ் பயங்கரவாத இயக் கத்தில் சேருவதற்காக கேரளாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற மற்றோர் ஆடவர் கொல்லப் பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் காசர்கேட் பகுதியைச் சேர்ந்த முகம்மது மர்வான் (படம்) என்னும் அந்த இளையர் ஆப்கானிஸ் தானில் கொல்லப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய 21 பேர் கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக ஈரான் சென்றனர். அவர் களுள் மூவர் ஏற்கெனவே ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். பெஸ்டின் வின்சென்ட், முகம்மது ஹஃபீசுதின், மர்‌ஷித் முகம்மது ஆகியோரே அவர்கள். "முகம்மது மர்வான் சில நாட்களுக்கு முன்னர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்," என்று மர்வானியின் தந்தைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.