பீகார் மாநிலத்தில் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச் சர்களில் 76 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளை எதிர்நோக்கு பவர்கள் என்ற விவரம் வெளி யாகி உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துட னான உறவை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கைகோர்த்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டு அமைச்சர வையை ஏற்படுத்தியது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சி களைச் சேர்ந்த 29 பேர் ஜூலை 29ஆம் தேதி அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களில் 22 பேருக்கு எதி ராகக் குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் இருவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. 20 அமைச்சர்களுக்கு எதிராக வழிப் பறி, திருட்டு, மோசடி, கொடுமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு உள்ளன.
பீகார் அமைச்சரவையில் இது போன்று குற்றவாளிகள் இடம் பெறுவது வழக்கம்தான் என்ற போதிலும் கடந்த அமைச்சர வையைக் காட்டிலும் இப்போது மூன்று குற்றவாளிகள் அதிகமாக இடம்பெற்ற அமைச்சரவையாக உள்ளது. மேலும், அமைச்சரவையிலுள்ள பெரும்பாலானவர்கள், அதாவது 21 பேர் கோடீஸ்வரர்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்னும் சமூகக் கண்காணிப்பு அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

