சசிகலா வழக்கில் எதிர்பாராத திருப்பம்; நீதிபதி திடீர் விலகல்

சசிகலா வழக்கில் எதிர்பாராத திருப்பம்; நீதிபதி திடீர் விலகல்

1 mins read
8fe5d0e9-1c45-4f13-83f8-fc9c7581a678
-

சசிகலா தமக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை விசாரிக்க இருந்த நீதிபதிகளுள் ஒருவர் திடீரென்று விலகிவிட்டார். அதனால் இவ்விவகாரத்தின் பின் னணியில் ஏதும் மர்மம் நிகழ்ந்துள்ளதா என ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா (படம்), இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது. அதனைத் தொடர்ந்து அம் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமக்கு எதிரான தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் சசிகலா, இளவவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. "அரசு ஊழியரான ஜெயலலிதா வுக்கு எதிரான வழக்கில் பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. ஜெய லலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கை முடித்து வைப் பதாக உச்ச நீதிமன்றம் அறிவித் தது. ஜெயலலிதாவை விடுவித்தி ருப்பதன் மூலம் அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் தண்டிக்க முடி யாது. எனவே எங்களையும் இவ் வழக்கிலிருந்து விடுவிக்க வேண் டும்," என அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது.