சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் பூரண நலத்துடன் எழுதுகோல் எடுத்து எழுதவேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்பதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முரசொலி பவளவிழா நிகழ்வில் தம்மால் கலந்துகொள்ள இயலவில்லை எனக் கூறியுள்ளார். "பாஜக தேசியத் தலைவர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் முரசொலி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. "திமுகவின் போர் வாளாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலி தமிழக அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது," என தமிழிசை சௌந்தரராஜன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் போர் வாளாக விளங்குகிறது முரசொலி: தமிழிசை வாழ்த்து
1 mins read

