மனிதச் சங்கிலி அமைத்து இயற்கை பாதுகாப்புக் குழு போராட்டம்

மனிதச் சங்கிலி அமைத்து இயற்கை பாதுகாப்புக் குழு போராட்டம்

1 mins read

தஞ்சை: விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிடவேண்டும் என இயற்கை பாதுகாப்புக் குழு வலியுறுத்தி உள்ளது. கதிராமங்கலம், நெடுவாசலில் நியாயமான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்போராட்டங்களுக்கு ஆதரவாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் மதுரையில் இக்குழுவினர் மனிதச் சங்கிலி அமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதச் சங்கிலி அமைத்தனர்.