விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து

2 mins read

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி, விடுதலைப் புலிகள் இயக்கத் தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம் என்றார். விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையைக் கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் நீக்கியதையடுத்து, இந்திய அர சும் அவ்வாறு செய்யவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விடுதலைப்புலி களால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை என்றும் அதனால் அங்கு விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் செயல்படும் தீவிர வாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அதே போல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நல னோடு இணைத்துப் பார்க்கக் கூடாது என்றார். "தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது 'வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்று பிரகடனப்படுத்திய திமுக வுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாது காக்க, அவர்களுக்காகப் போராட யாழ்ப்பாணத்தில் பெரியவர் சம்பந்தம் தலைமையில் மிக வலுவான ஜனநாயக இயக் கம் உயிர்ப்போடு உள்ளது," என கே.எஸ்.அழகிரி தெரிவித் துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவ தும் உள்ள தமிழர்களுக்காக ஜனநாயக வழியில் போராட தாய்த் தமிழகம் தயாராக உள்ள தாகக் குறிப்பிட்ட அவர், விடு தலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக்கூடாது என வலியுறுத்தினார்.