அண்மைய நாட்களாக சென்னை மக்களைப் பீதியில் ஆழ்த்தி வந்த நகைப் பறிப்புக் கொள்ளை யர்களில் இருவர் போலிசிடம் சிக்கினர். சந்தீப், 32, சஞ்சய் விஜய், 42, என்ற அந்த இருவரும்தான் அந்தக் கொள்ளைக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த பத்துப் பேர் கொண்ட அந்தக் கும்பல் விமானம் மூலம் சென்னை வந்து, வால்டாக்ஸ் சாலையில் உள்ள குறிப்பிட்ட ஒரு விடுதி யில் வாடகைக்கு அறையெடுத்து தங்கி, நகைப் பறிப்பில் ஈடுபடு வதை வழக்கமாகக் கொண்டிருந் தனர் என்று சொல்லப்படுகிறது. "அவர்களைப் பல நாட்க ளாகப் பின்தொடர்ந்து கண்கா ணித்தோம். சென்னையில் மட்டும் 20க்கு மேற்பட்ட நகைப் பறிப்புச் சம்பவங்களில் அவர் களுக்குத் தொடர்புள்ளது. இது போல இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் சம்பவங் களை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்," என்று வேப்பேரி காவல் நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அக்கும்பலைச் சேர்ந்தவர் களில் இருவர் அறையிலேயே தங்கிக்கொள்வர். வேறு இருவர் திருட்டு மோட்டார்சைக்கிளில் சென்று பெண்களிடம் நகையைப் பறிப்பர்.
இப்படிப் பலமுறை நகை களைப் பறித்ததும் மீண்டும் அக் கும்பல் டெல்லிக்குப் பறந்துவிடும். "நகைகளை அணிந்தபடி தெருக்களில் தனியாகச் செல் லும் பெண்களை மட்டுமே அவர்கள் எப்போதும் குறிவைப் பர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியின் துணை யுடன் இருவரைப் பிடித்துவிட் டோம். மற்றவர்களையும் விரை வில் பிடித்துவிடுவோம்," என்றார் அந்த போலிஸ் அதிகாரி.