பாலக்காடு: கேரளாவைச் சேர்ந்த தாதி ஒருவர் அரபு நாட் டில் ஏமனைச் சேர்ந்த தனது காதலனை 110 துண்டுக ளாக வெட்டி தண்ணீர்த் தொட்டியில் போட்டுவிட்டு தப்பிவிட்டார். அவரை ஏமன் காவல்துறையினர் உள்நாட்டி லும் வெளிநாடு களி லும் வலைவீசித் தேடி வருகின்றனர். நிமிஷா பிரியா என்ற அந்த தாதி, ஏமனில் அல் தைட் என்னுமிடத்தில் ஒரு மருந்தகத்தில் தாதியாகப் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரு டன் இணைந்து வாழ்ந்தார். விசாரணையில் அவர்கள் இருவரும் மணமுடித்துக் கொண்ட தாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லையென காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஆடவரின் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் துண்டுதுண்டாக வெட்டப் பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் போடப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு ஒருவித துர்நாற்றம் அடித்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். நிமிஷாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவரும் ஒரு குழந்தையும் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
காதலனை 110 துண்டுகளாக வெட்டிய கேரள தாதிக்கு ஏமன் போலிஸ் வலைவீச்சு
1 mins read

