கொச்சி: கேரள மாநிலத்தின் கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்த ஆடவர் ஒருவரது நாக்கைக் கடித்துத் துப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆடவர் வாயில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி அந்த இளம் பெண் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகார் செய்தார். துண்டான அந்த ஆடவரின் 2 செ.மீ. நீளமுள்ள நாக்கின் ஒரு பகுதியையும் காவல்துறையின ரிடம் காட்டினார். இந்தப் புகாரைத் தொடர்ந்து நகரிலுள்ள மருத்துவமனைகளை க் காவல்துறையினர் விழிப்பு நிலைப்படுத்தினர்.
இதில் நாக்கு துண்டான ஆடவர் ஒருவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண் டிருப் பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் விபத்துக் காரணமாக தனது நாக்கில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்க ளிடம் கூறி அந்த ஆடவர் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. அறுவை சிகிச்சை முடிந்து மருத் துவமனையை விட்டு வெளியேறிய தும் காவல்துறையினர் அந்த ஆடவரைக் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர். பாலியல் குற்றச்சாட் டுக்காக ஏற்கெனவே ஒரு வாரம் நீதிமன்றக் காவலில் அந்த ஆடவர் இருந்தார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

