கிரண்பேடியை நீக்கக்கோரி புதுச்சேரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

கிரண்பேடியை நீக்கக்கோரி புதுச்சேரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

1 mins read

புதுச்சேரி: புதுவை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரூ.20 கோடியைத் தள்ளுபடி செய்ய புதுவை அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான கோப்புகள் ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அந்தக் கோப்புகளுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முட்டுக்கட்டை போடும் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் அவரை புதுவையில் இருந்து மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மாநில விவசாயிகள் கூட்டமைப்பினர் அதன் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக, புதுச்சேரி விவசாயிகளை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.