அரசு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: முதல்வர் சித்தராமையா

அரசு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: முதல்வர் சித்தராமையா

1 mins read

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தவும், நெருக்கடி கொடுக்கவுமே மத்திய அரசு இந்த வருமான வரித்துறை சோதனையை நடத்தி உள்ளது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட போலி வருமான வரி சோதனை. இந்தச் சோதனையில் உள்ளூர் காவல்துறையினர் பயன்படுத்தப்படவில்லை. காவல் துறையின் விதிகளை மீறி மத்திய பாதுகாப்புப் படையை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது. இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. பாஜகவுக்கு எதிரான எங்களது குரலை அடக்க வருமான வரித்துறை ஏவி விடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிரான காங்கிரசாரின் போராட்டத்தை அடக்க பார்க்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அரசு இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவர் என்றார்.