கதிராமங்கலம்: நீர்நிலைகளுக்கும் பரவும் எண்ணெய்ப் படலம்; விவசாயிகள் கவலை

கதிராமங்கலம்: நீர்நிலைகளுக்கும் பரவும் எண்ணெய்ப் படலம்; விவசாயிகள் கவலை

2 mins read
9b046c61-3e4f-48e1-8d22-21ab595a0515
-

கும்பகோணம்: வயல்வெளிகளில் படிந்த எண்ணெய்க் கசிவை முழு மையாக அகற்றாத காரணத்தால் கதிராமங்கலம் பகுதியில் விவ சாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள் ளதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலை தெரி வித்துள்ளனர். எண்ணெய்க் கசிவு தற்போது அப்பகுதியில் உள்ள நீர்நிலைக ளுக்கும் பரவி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் குழாய் களைப் பதித்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓஎன்ஜிசி செயல்படுத்தும் திட்டம் காரணமாக நீர் மற்றும் நில வளங்கள் பாதிக்கப்படும் என்பது இவர்களது கவலையாக உள்ளது. இதற்கேற்ப எண்ணெய்க் குழாய்களில் சில வாரங்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டது. இதனால் வயல் வெளிகளில் எண்ணெய் ஊடுரு வியது. பல ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து கதிராமங்க லத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் எண்ணெய்க் கிணறுகளால் குடிநீரிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக இயற்கை முறையில் தாம் பாரம் பரிய நெல், வாழை, பயிறு வகை களை சுமார் 10 ஏக்கரில் சாகுபடி செய்து வருவதாகக் குறிப்பிடும் அவர், கடந்த ஜூன் 30ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் தமது விளைநிலம் முழுவதும் எண்ணெய் படிந்ததாகக் கூறுகிறார்.

"எண்ணெய்ப் படலம் முழுமை யாக அகற்றபடாமல் உள்ள நிலையில், அவ்வப்போது பெய்யும் மழையால் இப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் எண்ணெய் பரவி வருகிறது. "இதே நிலை நீடித்தால் இந்தப் பகுதியில் சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படக் கூடும்," என்று விவசாயி ஸ்ரீராம் கவலை தெரிவித்துள்ளார். எண்ணெய் கலந்த நீரால் வயலில் இறங்கி வேலை செய்யவே அச்சமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கதிராமங்கலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கதிராமங்கலத்தில் கண்ணைக் கட்டி போராட்டம் நடத்திய பெண்கள். படம்: ஊடகம்