கத்திக்குத்திலிருந்து தப்பினார் ஓபிஎஸ்; ஆடவரை மடக்கிப் பிடித்தனர் போலிசார்

கத்திக்குத்திலிருந்து தப்பினார் ஓபிஎஸ்; ஆடவரை மடக்கிப் பிடித்தனர் போலிசார்

1 mins read

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்த முயன்ற ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னையிலிருந்து நேற்றுக் காலை திருச்சிக்கு வந்தார் ஓபிஎஸ். விமான நிலையத்தின் வெளியே தமது ஆதரவாளர் களிடம் பூங்கொத்துகளை வாங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று ஒருவர் ஓபிஎஸ்ஸை நோக்கிப் பாய்ந்தார். அவரது கையில் கூர்மையான கத்தி இருந்தது. உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினர் அந்த ஆடவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டது. அவரது பெயர் சோலை ராஜன் என்றும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் அவர் என்றும் பின்னர் போலிசார் தெரிவித்தனர். என்ன காரணத்துக்காக ஓபிஎஸ்ஸை அவர் தாக்க வந்தார் என போலிசார் விசாரிக்கின்றனர்.