அரசின் அதிகாரம் மக்களுக்கான அதிகாரமாக மாறவேண்டும்: சீமான்

அரசின் அதிகாரம் மக்களுக்கான அதிகாரமாக மாறவேண்டும்: சீமான்

2 mins read

கும்பகோணம்: போராட்டம் என்று வந்துவிட்டால் மக்கள் அச்ச மின்றிக் களம்காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்றார். "மதுக் கடைகளை மூட முடி யாது என ஆட்சியாளர்கள் கூறு கின்றனர். ஆனால் மக்கள் அதற் காகப் போராட்டம் நடத்தி வருகின் றனர். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வாழ்வது சிரமம் என்பதைப் புரிந்து கொண்டுதான் மக்கள் போராடத் தொடங்கி உள்ளனர்," என்றார் சீமான். அரசு அதிகாரம் மிகப்பெரிய அதிகாரம் என்று குறிப்பிட்ட அவர், அந்த அதிகாரமானது இப் போது தனி பெரும் முதலாளிகளின் கைக்கு மாறியிருப்பதாக கவலை தெரிவித்தார்.

அரசு அதிகாரம் என்பது மக்களுக்கான அதிகாரமாக மாற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மக்களின் நலனுக்கான அதிகாரமாக இருந்தால்தான் நாடு வளம்பெறும் என்று கூறினார். நீலகிரி மாவட்டத்திற்கும், கேரளா மாநிலத்திற்கும் இடையே ஏழு அணைகள் கட்டுவதற்கு இந்திரா காந்தி காலத்தில் அடிக் கல் நாட்டப்பட்டதாக நினைவு கூர்ந்த அவர், அந்தத் திட்டம் தற்போது மறந்தே போய்விட்டது என்று இடித்துரைத்தார். அவ்வாறு ஏழு அணைகள் கட்டப்பட்டால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீரை கேட்க வேண்டிய அவசியமே தமிழகத்துக்கு ஏற்படாது என்றும் சீமான் சுட்டிக்காட்டினார்.

"ஜல்லிக்கட்டுக்காக மாணவர் சமுதாயம் கூட்டம் கூட்டமாக வந்து போராடிச் சாதித்தது. அதற்கு காரணம் நமது முன் னோர் விதைத்த விதைதான். போராட்டம் என்று வந்துவிட்டால் அச்சமின்றிப் போராட வேண்டும். "கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும். இல்லை யேல் தமிழகத்தில் விவசாயம் பாதித்து, விவசாயிகளையும் காப் பாற்ற முடியாது," என்றார் சீமான்.