திருச்சி: ஓ.பன்னீர்செல்வத்தை கொலை செய்யும் நோக்கம் தமது கணவருக்கு அறவே இல்லை என திருச்சியில் கைது செய்யப்பட்ட சோலைராஜனின் மனைவி ராஜேஸ்வரி கூறியுள்ளார். நேற்று முன்தினம் அவரை விமான நிலையத்தில் போலிசார் கைது செய்தனர். இந்நிலையில், தனது கணவர் ஓர் அப்பாவி என ராஜேஸ்வரி குறிப்பிட்டார். "என் கணவர் அதிமுகவின் தீவிர தொணடர். பன்னீர்செல்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே அவர் அருகில் சென்றார். வேறு எந்த நோக்கமும் இல்லை," என்று ராஜேஸ்வரி மேலும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை கொலை செய்யும் நோக்கம் இல்லை: சோலைராஜன் மனைவி கதறல்
1 mins read

