மின்மயத்தை அல்ல கற்காலத்தை நோக்கிச் செல்கிறது இந்தியா: விவசாயி அய்யாக்கண்ணு

மின்மயத்தை அல்ல கற்காலத்தை நோக்கிச் செல்கிறது இந்தியா: விவசாயி அய்யாக்கண்ணு

2 mins read
96636fe2-fe17-44b5-93e0-842d5edd9163
-

புதுடெல்லி: உடலில் இலை, தழைகளைக் கட்டியபடி தமிழக விவசாயிகள் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடன் தள்ளுபடி, விளை பொருட் களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தேசிய தென் னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தினமும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வரும் விவ சாயிகள், நேற்றுமுன்தினம் உட லில் சேறு பூசி போராட்டம் நடத்- தினர். இந்த நிலையில் நேற்று 22வது நாளாகப் போராட்டம் நடை பெற்றது. போராட்டக்குழுத் தலை வர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உடலில் இலை, தழைகளைக் கட்டியபடி ஆதிவாசி கள் போல ஜந்தர் மந்தரில் போராட் டம் நடத்தினர். இதில் சிலர் மனித மண்டை ஓடுகளைக் கழுத் தில் தொங்கவிட்டபடி கலந்து கொண்டனர்.

பின்னர், அய்யாக்கண்ணு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். "வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்- ளனர். விவசாயிகளின் பிரச்சினை களை பிரதமர் நரேந்திரமோடி காது கொடுத்துக் கேட்பதில்லை. சமூக வலைத்தளங்களான 'வாட்ஸ்-அப்', 'பேஸ் புக்' ஆகிய வற்றின் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் விவசாயிகள் வறுமையாலும் வறட் சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். "பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத் தின்போது, இந்தியாவை மின்மய மாக்குவோம் என்றார். ஆனால் விவசாயிகளின் தற்போதைய நிலைமை கற்காலத்தை நோக்கி செல்வது போல உள்ளது. "இதனை உணர்த்தும் வகை யில் உடலில் இலை, தழைகளைக் கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளின் பிரச்சினை தீரும் வரை எங்களின் போராட்டம் தொடரும்," என்றார்.

டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள். படம்: ஊடகம்