சிட்னி: ஆஸ்திரேலியாவில் பதிவு செய்துகொள்ளாமல் அல்லது தேவையற்ற துப்பாக்கி கள் வைத்திருப்போர் அவற்றை போலிசாரிடம் ஒப்படைப்பதற்கு ஜூலை முதல் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தக் காலகட்டடத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைப்போர் தண்டனையிலிருந்து தப்ப முடியும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத் திருப்போருக்கு 280,000 ஆஸி. டாலர் (S$301,728) வரை யிலான அபராதம் அல்லது 14 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப் படும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 6,000க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டதாக போலிசார் கூறினர். ஆஸ்திரேலியாவில் 260,000 சட்டவிரோத ஆயுதங்கள் புழக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று அரசாங் கம் ஜூன் மாதம் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் தீவிர வாதத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்ப வங்களின் மிரட்டல் அதி கரித்துள்ள நிலையில் அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க அத்தகைய ஆயுதங் களை ஒப்படைக்க அரசாங்கம் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்துள்ளது.

