தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தாக்கும் நோக்கில் கத்தியுடன் வந்ததாகக் கருதப்பட்ட சோலைராஜன் மீது வழக்குப் பதியாமல் போலிசார் விடுவித்தனர். விசாரணை யில் அவர் அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரியவந்தது. அவர் தன் மகளின் திருமணத்துக்காக உதவி கேட்கவும் பன்னீர்செல்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மட்டுமே எண்ணி இருந்ததாக சோலைராஜனின் மனைவி கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓபிஎஸ், உடனடியாக சோலைராஜனை பெரியகுளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வரவழைத்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவரது மகளின் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருட்களையும் அளித்தார். திருமணச் செலவுக்கு பணம் கொடுத்தார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

