சென்னை: கட்சராயன் ஏரியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஏரியில் தூர் வாரும் பணிகளைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்குவதில் கௌரவப் பிரச்சினை ஏதுமில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சராயன் ஏரியைத் திமுகவினர் பல நாட்களாகத் தூர் வாரிவந்த நிலையில், அப்பணியைப் பார்வையிட அங்கு சென்றார் ஸ்டாலின். எனினும் இடையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்படவே, நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏரியைப் பார்வையிட அனுமதிக்க வேண்டுமென நேற்று உத்தரவிட்டது. மேலும், எதிர்க்கட்சித் தலைவரான அவர், ஏரியில் இருந்து மணல் எடுத்துச் செல்லப் போகிறாரா எனவும் அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பி இடித்துரைத்தது.
ஏரியைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
1 mins read

