முதல்வர், இரு அமைச்சர்கள் பதவி விலக டிராபிக் ராமசாமி வலியுறுத்து

முதல்வர், இரு அமைச்சர்கள் பதவி விலக டிராபிக் ராமசாமி வலியுறுத்து

1 mins read

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமியும் இரு அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார். இதற்காகத் தமிழகம் முழுவதும் தாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "கொள்ளையடிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இதற்கு மத்திய அரசு உதவுகிறது," என்றார் டிராபிக் ராமசாமி.