கொசு ஒழிப்பு பணிக்கு லஞ்சம்: பிடிபட்டார் மாநகராட்சி ஆணையர்

கொசு ஒழிப்பு பணிக்கு லஞ்சம்: பிடிபட்டார் மாநகராட்சி ஆணையர்

1 mins read
7f6de9d7-3eb8-429d-9adc-2c4126ff8f81
-

வேலூர்: டெங்கி கொசு ஒழிப்புப் பணியை மேற்கொண்ட ஒப்பந்த தாரரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் வேலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவர் கையும் களவுமாகச் சிக்கினார். வேலூர் மாநகராட்சி ஆணை யராக இருக்கும் குமார் மீது ஏற்கெனவே பல்வேறு லஞ்சப் புகார்கள் நிலுவையில் உள்ளன. தற்போது அவர் வசமாக சிக்கியுள்ள நிலையில், பழைய புகார்கள் குறித்து அவரிடம் போலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது டெங்கி கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் வேலப் பாடி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள தொட்டிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக் கான ஒப்பந்தப் பணியை பாலாஜி (வயது 30) என்பவர் மேற்கொண் டார். இதற்காக மாநகராட்சி நிர்வா கம் அவருக்கு ரூ.10 லட்சத்து 23 ஆயிரம் தர வேண்டியுள்ளது. கடந்த ஜூன் மாதமே பணியை முடித்துவிட்டபடியால், தனக்குரிய தொகையை வழங்குமாறு ஆணை யர் குமாரிடம் கோரியுள்ளார் பாலாஜி.

குமார். படம்: ஊடகம்