5ஆம் வகுப்பு படித்து 17 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

5ஆம் வகுப்பு படித்து 17 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

1 mins read

நெல்லை: 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கடந்த 17 ஆண்டுகளாக மருந்தகம் ஒன்றை அமைத்து அதில் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். நெல்லையை அடுத்த பேட்டை, ரகுமான்பேட்டை ஆர்.பி.சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத் தும் அதிகாரிகள், பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் பிர்தவுசி யுடன் சேர்ந்து சென்றனர். அவர் களைப் பார்த்ததும் வீட்டில் இருந்த நபர் சுவரில் ஏறிக் குதித்து தப்பி ஓட முயன்றபோது மக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர் மானூர் அருகே உள்ள கானார்பட்டியைச் சேர்ந்த சந்திரபோஸ், 50, என்ற ஷேக் முகமது என்பதும் போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித் துள்ள அவர் சித்த மருத்துவ படிப்பு படித்துள்ளதாகக் கூறி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். சந்திரபோஸ் பேட்டையில் மருந் தகம் நடத்தி வந்துள்ளார். அவர் அலோபதி, ஓமியோபதி, சித்த மருத்துவம் என்று அனைத்துவித மருத்துவமும் செய்துள்ளார். அவ ரிடம் விசாரணை தொடர்கிறது.