தஞ்சை: அதிமுகவை கட்டிக்காப்ப தற்கான எந்த ஒரு நடவடிக்கை யையும் தாம் துணிச்சலுடன் மேற் கொள்ளப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தாம் யாரையும் தற்போது வசைபாட விரும்ப வில்லை என்றார். பயத்தின் காரணமாகவே தமக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று நிறைய அமைச்சர்கள் தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்ட தினகரன், யாரோ அமைச்சர்களின் பின்னால் துப்பாக்கி, கத்தியை வைத்து மிரட்டுகின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது என்றார். கட்சியின் துணைப் பொதுச் செயலர் என்ற முறையில் அதைக் காப்பாற்றும் பொறுப்பு தமக்கு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை எதிர்கொள்வது குறித்து அப்போது உரிய முடி வெடுக்கப்படும் என்று கூறினார்.
"எங்களால் பலன் பெற்ற நண்பர்களில் சிலர் சுயநலம் மற் றும் பயத்தின் காரணமாக கட்சி யிலிருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் என்று தற்போது பேசு கின்றனர். பதிலுக்கு, நான் யாரை யும் வசைபாட விரும்பவில்லை. "திவாகரனை இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது, அவருக்கு பதவி வழங்குவது குறித்து சசி கலாதான் முடிவு செய்வார். என்னைத் தகுதி நீக்கம் செய்வதாக முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் செல்லாது," என்று தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுகவின் முழு அதிகார மும் பொதுச் செயலர் வசமே உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், கட்சியும் ஆட்சியும் எந்தவொரு தனி நபரிடமோ அல்லது அணி யிடமோ இல்லை என்றார். "தற்போது நடைபெறும் ஆட்சி நீடிக்குமா என்பதை முதல்வர், அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும்," என்றார் தினகரன்.

